தூத்துக்குடியில் அதிர்ச்சி.. பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனுக்கு தொடர் பாலியல் தொல்லை.? 



viathikulam-student-sexual-harrasment

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவனுக்கு, சக மாணவர்கள் சிலர் நீண்ட காலமாக பாலியல் ரீதியாகத் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவனை குறிவைத்து, சக மாணவர்கள் சிலர் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் தெரிவித்தால் பிரச்சினை ஏற்படும் எனக் கூறி மாணவனை அச்சுறுத்தி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் காரணமாக மாணவன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. மேலும், அவனது உடல்நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த ஆசிரியர் ஒருவர், மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து நிலைமையைத் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: அடப்பாவீங்களா.... வகுப்பறையில் மாணவனை நிர்வாணப்படுத்தி ரப்பர் பேண்ட், ஸ்கேலால் அடித்து மிளகாய் பொடி தூவி..... 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்..! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்...!!!

Tuticorin

இதையடுத்து பெற்றோர் தங்களது மகனிடம் விசாரித்தபோது, தங்களது மகனுக்கு சக மாணவர்களே பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அந்த மாணவரை வகுப்பறைக்குள் நிர்வாணமாக்கி நிற்க வைத்து ரப்பர்பேண்ட், ஸ்கேல் உள்ளிட்டவற்றால் அவரது பிறப்புறுப்பில் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், மிளகாய் பொடி தூவியும், பப்பிள்கம் ஒட்டியும் சித்ரவதை செய்துள்ளனர்

இதனையடுத்து மாணவனின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாணவனுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, சக மாணவர்கள் அளித்ததாகக் கூறப்படும் தொல்லை மற்றும் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: இன்ஸ்டா பழக்கம்.. சிறுமியை கடத்திச் சென்று போக்ஸோவில் சிக்கிய 19 வயது காதலன்.!