சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘டிசி’ பட நாயகி.. ஹெச்.வினோத் படத்தில் இணைந்த புதிய கூட்டணி!
அடப்பாவீங்களா.... வகுப்பறையில் மாணவனை நிர்வாணப்படுத்தி ரப்பர் பேண்ட், ஸ்கேலால் அடித்து மிளகாய் பொடி தூவி..... 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்..! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்...!!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் நீண்டகாலமாக பாலியல் மற்றும் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. வகுப்பறைக்குள்ளேயே மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 9 மாணவர்களை கைது செய்துள்ளனர்.
வகுப்பறைக்குள் நடந்த கொடுமை
பாதிக்கப்பட்ட மாணவனை அவருடன் படிக்கும் 9 சக மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. வகுப்பறைக்குள் மாணவனை நிர்வாணப்படுத்தி, ரப்பர் பேண்ட் மற்றும் ஸ்கேலால் அடித்ததுடன், மிளகாய் பொடியையும் தூவியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியே கூறினால் மீண்டும் தாக்குவோம் என மிரட்டியதால், மாணவன் அச்சத்தில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இதற்கிடையே மாணவனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதை கவனித்த ஆசிரியர் ஒருவர் சந்தேகமடைந்து, மாணவனின் தாயாரிடம் தகவலை தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த தாய், பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.
புகாரை மூடிமறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு
ஆனால், தலைமை ஆசிரியர் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், மாணவனின் உடல்நிலை சரியாகும் வரை விடுப்பு எடுக்குமாறும் கூறியதாக புகார் தெரிவிக்கிறது. பள்ளி நிர்வாகத்தின் அணுகுமுறையால் அதிருப்தியடைந்த மாணவனின் தாய், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவன் கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்ததாக தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றச்சாட்டில் தொடர்புடைய 9 மாணவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருநெல்வேலி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
மாணவர்களுக்கு ஆலோசனை;
இதற்கிடையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு குழந்தைகள் நலக்குழு மூலம் ஆலோசனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், போலீசாரின் விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு, புகாரை உரிய முறையில் கையாளாமல் மூடிமறைக்க முயன்றதாக கூறப்படும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்டா பழக்கம்.. சிறுமியை கடத்திச் சென்று போக்ஸோவில் சிக்கிய 19 வயது காதலன்.!