தமிழகத்தை அதிரவைக்கும் இன்புளூயன்சா காய்ச்சல்.. தவிர்க்கும் வழிமுறைகள், ஆலோசனைகள் என்னென்ன?..!

தமிழகத்தை அதிரவைக்கும் இன்புளூயன்சா காய்ச்சல்.. தவிர்க்கும் வழிமுறைகள், ஆலோசனைகள் என்னென்ன?..!



Influenza Virus Awareness Tamil

கடந்த சில வாரங்களாகவே மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வரும் இன்புளுயன்சா காய்ச்சல் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.

இன்புளூயன்சா வகை காய்ச்சலால் தமிழக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 1918ல் இன்புளூயன்சா காய்ச்சல் உலகளவில் மக்களை அச்சுறுத்தியது. அன்று இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்கான தடுப்பூசி கண்டறியப்பட்ட பின்னர் நோயின் வீரியம் கட்டுக்குள் வந்தது. கோடை முடிந்து பருவமழையின் தொடக்கத்திற்கு முன்பு இன்புளுயன்சா பரவும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தனிமனித இடைவெளி, முகக்கவசம் போன்றவற்றை பின்பற்றினோம். அதனைப்போல நோயெதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட்டதால் காய்ச்சல் கட்டுக்குள் இருந்தது. கொரோனாவை தடுப்பூசியால் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்ட நிலையில், மக்கள் முகக்கவசத்தை மறந்துவிட்டனர்.

இதனால் தமிழகத்தில் இன்புளுயன்சா வகை காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. மேலும், டெங்கு, டைபாய்டு போன்ற காய்ச்சலும் ஏற்படுகின்றன. மருத்துவமனைகளில் கூட்டம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். இன்புளுயன்சா வைரஸ் குளிர்காலத்தில் பரவும். 

Influenza

இது பருவமழையின் காரணமாக செப்டம்பர், அக்டோபர் & நவம்பர் மாதங்களில் அதிகளவில் பரவும். உடலின் வெப்பநிலை 102 டிகிரிக்கு மேல் இருக்கும் பட்சத்தில் மருத்துவமனைக்கு செல்வது நல்லது. எந்த வகையான காய்ச்சல் என்பதை அறிய இரத்த பரிசோதனை செய்து மருத்துவரின் அறிவுரைப்படி மருந்துகளை வாங்கி சாப்பிடலாம். சுய மருந்துகள் எடுத்துக்கொள்ள கூடாது. 

இன்புளூயன்சா ஏ,பி, போரா-இன்புளூயன்சா, எச்1என்1 என்ற வகையில் பரவுகிறது. தொண்டை வலி, வறட்டு இருமல், மூக்கில் நீர் வடிதல் போன்ற அறிகுறி இருப்பின் மருத்துவரை நாடுவது நல்லது. தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். ஐஸ்கிறீம், குளிர்பானம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

இவ்வகை காய்ச்சல் உள்ளவர்கள் இரும்பினால் அல்லது தும்மினால் பிறருக்கும் நோய் பரவும். இதனால் நோய்ப்பாதிப்பு உள்ளவர்கள்  முகக்கவசம் அணிய வேண்டும். நீர்ச்சத்துள்ள பானங்களை அதிகளவில் சாப்பிட வேண்டும். இவை அனைத்தையும் தவிர்த்து இன்புளுயன்சா காய்ச்சலுக்கு என தடுப்பூசியும் உள்ளது. அதன் மூலமாக காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.