கைராசிக்கார டாக்டர் செய்யிற வேலையா இது? அலறியபடி கணவரிடம் ஓடிவந்த 19 வயது பெண்.. ஆஸ்பத்திரிக்குள் திக்., திக்.!
ஆயுர்வேதம் படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த நபர், இறுதியில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைராசிக்காரர் என தனக்குத்தானே பட்டம்:
Tiruttani News Today: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, சின்ன நாகம்பூண்டி கிராமத்தில் கிளீனிக் வைத்து நடத்தி வருபவர் பாஸ்கர் (வயது 52). இவர் தன்னை கைராசிக்காரர் என கூறி, உள்ளூரில் நோய்வாய்ப்படும் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று அங்குள்ள தாமினேரி பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் தனது கணவருடன் பாஸ்கரை சென்று சந்தித்துள்ளார்.
இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

பலாத்கார முயற்சி:
மேலும், குழந்தை இல்லை என்று கூறி சிகிச்சைக்கு வந்ததாக தெரிவித்த பெண்ணை, தனி அறைக்கு அழைத்துச் சென்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பதறிப்போன பெண்மணி அலறியபடி வெளியே வந்து கணவரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, மனைவியை கையுடன் திருத்தணி காவல் நிலையம் அழைத்துச் சென்ற நபர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றத்தை உறுதி செய்தனர்.

விசாரணை தீவிரம்:
அப்போது, பாஸ்கர் போலி மருத்துவர் என்ற அதிர்ச்சி உண்மையும் வெளியானது. அதாவது, ஆயுர்வேதம் படித்துள்ள பாஸ்கர், தன்னை எம்.பி.பி.எஸ் என்று கூறி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். பிற மருத்துவர்களை காட்டிலும் இவரிடம் ரூ.50 குறைவு என்பதால், பலரும் பாஸ்கரை தேடி வந்து மருத்துவம் பார்த்துச் சென்றுள்ளனர். இதனால் சிகிச்சை பெற வந்தவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறதா? பாதிக்கப்பட்ட பெண் போல வேறு யாருக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? எனவும் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!