வீட்டு வாசலில் பாத்திரம் கழுவிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. விசிக நிர்வாகி கைது.!



in Theni VCK Party member Arrested by COps 

 

3 குழந்தைகளின் தாயான பெண் ஒருவருக்கு, விசிக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், கைலாசபட்டி, அம்பேத்கர் காலனியில் 38 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர், இரண்டு ஆண், ஒரு பெண் என 3 குழந்தைகள் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: 4 பேர் கும்பலால் 22 வயது இளம்பெண் கூட்டுப்பலாத்காரம்; தேனியில் பயங்கரம்.! 

சம்பவத்தன்று பெண்மணி தனது வீட்டின் முன்பு பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தார். அச்சமயம், அவ்வழியே தென்கரை பேரூராட்சி விசிக துணை செயலாளர் சங்கையா வந்துள்ளார்.

Theni

விசிக நிர்வாகி கைது

இவர் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடவே, பெண் அலறி இருக்கிறார். மனைவியின் சத்தம் கேட்டு வந்த கணவன், சங்கையாவை தள்ளிவிட்டு மனைவியை காப்பாற்றினார். 

மேலும், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சங்கையாவை பிடித்தனர். பின் தென்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்விடத்திற்கு வந்த அதிகாரிகள், விசாரணை நடத்தி, பெண் கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கையாவை கைது செய்தனர். 

இதையும் படிங்க: விக்ரமன் மீது சர்ச்சை குற்றச்சாட்டு.. அறம் வென்றதா? பரபரப்பு ட்விட்.!