விக்ரமன் மீது சர்ச்சை குற்றச்சாட்டு.. அறம் வென்றதா? பரபரப்பு ட்விட்.!



Vikraman Trending Topic Update 

 

சென்னையில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியில், விசிக பிரமுகர் விக்ரமன் வசித்து வந்தபோது, நள்ளிரவு நேரத்தில் பெண் போல வேடமணிந்து தொல்லை கொடுத்ததாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகியது. 

இதையும் படிங்க: #Breaking: டெல்லியில் ஆம் ஆத்மி படுதோல்விக்கு காரணம் என்ன? - திருமாவளவன் ஓபன் டாக்.!

இதனிடையே, வீடியோ அடுத்தடுத்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விக்ரமன் தரப்பில் வீடியோ குறித்து கூறுகையில், சினிமா படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட வீடியோ தவறான தகவலுடன் பகிரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

விக்ரமனின் ட்விட்டர் பக்கத்தில், "சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அறத்தின்படி செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்த பாலிமர் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கார் - வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; 4 பேர் பரிதாப பலி.!