உயிருடன் புதைந்து பலியான 2 பெண்கள்.. கட்டுமான பணியில் நடந்த அசம்பாவிதம்.. மதுரையில் கண்ணீர் சோகம்.!



in Madurai 2 Construction Workers Dies 

 

2 பெண் கூலித்தொழிலாளர்கள் மண்சரிந்து உயிரிழந்த சோகம் மதுரையில் நடந்துள்ளது.

கட்டிட பணிகள்:

மதுரை மாவட்டத்தில் உள்ள சிலைமான், புளியங்குளம் பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவர் விரகனூர் பகுதியில் திருமண மண்டபம் ஒன்றை கட்டிவருகிறார். இதுதொடர்பான கட்டுமானப்பணிகள் ஒரு மாதமாகவே விறுவிறுப்புடன் நடைபெற்று வந்துள்ளன.

இதையும் படிங்க: கட்டிடம் இடிக்கும் பணியில் சோகம்.. பரிதாபமாக பறிபோன இளம் உயிர்கள்.!

கான்கிரீட் பணி:

நேற்றும் வழக்கம்போல வேலை நடைபெற்ற நிலையில், 4 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் கட்டுமானப்பணிகள் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். திருமண மண்டபத்தின் அஸ்திவாரத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கான்கிரீட் அமைக்க, கம்பி கட்டி அதனை பள்ளத்தில் வைக்கும் பணிகள் நடந்தது.

madurai

மண்சரிந்தது:

மதியம் உணவு இடைவேளைக்குப்பின் வழக்கம்போல பணிகள் தொடங்கிய நிலையில், பள்ளத்தில் புளியங்குளத்தைச் சேர்ந்த தமிழரசி (வயது 60), மணலூரைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 46) ஆகியோர் இருந்தனர். அப்போது, பள்ளம் தோண்டியதில் குவித்து வைக்கப்பட்ட மண், திடீரென இருவரின் மீதும் சரிந்தது.

பரிதாப பலி:

இந்த சம்பவத்தில் இருவரும் அங்கேயே சிக்கிக்கொண்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து உதவி செய்தனர். அவசர குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் வந்து மீட்பு பணிகள் முடிவதற்குள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து சிலைமான் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பனை நுங்கில் பாய்ந்த மின்சாரம்.. கல்லூரி மாணவர்கள் துள்ளத்துடிக்க பலியான சோகம்..!