பெண்ணுடன் கள்ளக்காதல்.. வாயில் விஷம் ஊற்றி துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட இளைஞர்.. தாத்தா-பேரன் பகீர் செயல்.!



in Chengalpattu Maduranthagam a Man Killed by Grand Son and Grand Father Over Illegal Affair Dispute 

பெண்ணுடன் தவறான தொடர்பை ஏற்படுத்திய இளைஞர் இறுதியில் கொலை செய்யப்பட்ட சோகம் நடந்துள்ளது.

கள்ளக்காதல் உறவு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், சூனாம்பேட்டை, தாமரைக்கேணி கிராமத்தில் வசித்து வருபவர் மணி. இவரின் மகன் விஜய் (வயது 30). இவர் கட்டிட வேலை செய்கிறார். இதனிடையே, அதே ஊரில் வசித்து வரும் திருமணமான பெண் ஒருவருடன் விஜய்க்கு ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கள்ளக்காதல் ஜோடி அவ்வப்போது உல்லாசம் அனுபவித்து வந்துள்ளது.

இதையும் படிங்க: சித்தி மகளுடன் கள்ளக்காதல்.. 20 வயது கல்லூரி மாணவி கொலை.. கணவனின் கொடூரம்.. திருவள்ளூரில் பயங்கரம்.!

illegal affair

சடலம் மீட்பு:

இதனிடையே, இந்த தகவல் பெண்ணின் தந்தையான தேவராஜுக்கு தெரியவந்துள்ளது. அவர் விஜயை நேரில் அழைத்து கண்டித்து இருக்கிறார். இதனை கண்டுகொள்ளாத விஜய் தொடர்ந்து பெண்ணுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று விஜய் வீட்டில் இருந்து  மாயமானார். இதனால் அவரை குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அவரின் உடல் தோப்பு ஒன்றில் காலில் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டது.

illegal affair

பரபரப்பு தகவல் அம்பலம்:

தகவல் அறிந்து வந்த சூனாம்பேடு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது அம்பலமானது. தேவராஜுடன் 17 வயது பேரனான பள்ளி சிறுவனும் கொலை சம்பவத்தில் உடந்தையாக இருந்துள்ளார். காலில் முதலில் விஜயை வெட்டிவிட்டு, அங்கிருந்து அவர் தப்பிச் செல்ல முடியாத சூழலில் இருவரும் சேர்ந்து விஷத்தை வாயில் ஊற்றி கொலை செய்துள்ளனர். உடலில் விஷம் கலந்து, ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே விஜய் துடிதுடிக்க உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தாத்தா - பேரனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதலியை திருமணம் செய்ய அண்ணனிடம் பெண் கேட்ட இளைஞர்.. கடலில் நடந்த பரபரப்பு சம்பவம்.. பறிபோன உயிர்.!