கள்ளக்காதலியை திருமணம் செய்ய அண்ணனிடம் பெண் கேட்ட இளைஞர்.. கடலில் நடந்த பரபரப்பு சம்பவம்.. பறிபோன உயிர்.! 



Man Murdered Over Illicit Relationship in Ramanathapuram; Body Dumped in Sea After Brutal Attack

கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது.

சடலம் கரை ஒதுங்கியது:

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி, நரிப்பையூர், வெள்ளப்பட்டி கடற்கரையில் கடந்த மே 16ம் தேதியன்று வாலிபரின் சடலம் ஒன்று கரையொதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த வாலிநோக்கம் மரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, உயிரிழந்தவர் கன்னிராஜபுரம் பகுதியில் வசித்து வந்த சிலம்பரசன் (வயது 35) என்பது தெரியவந்தது. இவர் அப்பகுதியில் வீட்டு காட்டிக்கொடுக்கும் காண்ட்ராக்டர், மீன்பிடித்தொழில் செய்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஆயிரம் இருந்தாலும் அவ பொண்டாட்டி.. நீ...' மனைவியை திட்டியதால் கொடூர கொலை.! திடுக் சம்பவம்.!

Crime news 

கொலை உறுதி:

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அதிகாரிகள் அனுப்பி வைத்திருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் தூத்துக்குடி மாவட்டம், வேம்பாரைச் சேர்ந்த கண்ணன் (வயது 45) கைது செய்யப்பட்டார். விசாரணையில், நண்பர்களுடன் சேர்ந்து சிலம்பரசன் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. அதாவது, செல்வலிங்கம் என்பவரின் தங்கை கன்னிராஜபுரத்தில் வசித்து வருகிறார். அவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் சிலம்பரசனுக்கும் - பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

Crime news

திருமணத்துக்கு கோரிக்கை:

இந்த தகவலை அறிந்த செல்வலிங்கம், சிலம்பரசனை கண்டித்து இருக்கிறார். சிலம்பரசனோ உனது தங்கையை எனக்கு திருமணம் செய்து வைக்க முடியுமா? என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வலிங்கம், அவரை கொலை செய்துள்ளார். தனது திட்டப்படி நண்பர்கள் மாரிமுத்து (வயது 26), ரமேஷ் கண்ணன் (வயது 26) ஆகியோரை வரவழைத்து, சம்பவத்தன்று அனைவரும் சேர்ந்து மதுபானம் அருந்தி இருக்கின்றனர். பின் சிலம்பரசனுக்கு அதிக மதுவை ஊற்றிவிட்டு படகில் அழைத்துச் சென்று துடுப்பால் அடித்துக்கொலை செய்து உடலை கடலில் வீசியுள்ளனர்.

மாரிமுத்து, ரமேஷ் கண்ணன் ஆகியோருக்கு பணம் கொடுத்து குற்றாலம் அனுப்பி வைத்த நிலையில், விசாரணைக்குப்பின் அனைவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: மனைவி வெளியே போன கேப்பில் கள்ளக்காதலியுடன் ஜல்சா.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக்கொலை.!