வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. கதவை திறந்த உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பறிபோன உயிர்., துடிதுடித்த சிறுவன்.. தாயின் பயங்கரம்.!



Karnataka Doctor Found Dead at Home; Wife Arrested in Murder Case

மேட்ரிமோனியில் சந்தித்து மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை தொடங்கியவர்கள் இறுதியில் ஏற்பட்ட மனக்கசப்பால் எடுத்த முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம், சங்கேஷ்வர் தாலுகா, ஹெப்பால் கிராமத்தில் வசித்து வருபவர் கிரண். இவர் மயக்கவியல் துறை மருத்துவர் ஆவார். விஜயபுரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பிரியங்கா. இவர்கள் இருவரும் மேட்ரிமோனி செயலியில் சந்தித்துக்கொண்டு பின் திருமணம் செய்துகொண்டனர்.

இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த பயங்கரம்.. வயலில் நடந்தது என்ன? கிருஷ்ணகிரியை அதிரவைக்கும் கொடூரம்.!

மருத்துவர்கள்:

விவாகரத்து பெற்ற தம்பதிகள் இருவரும் திருமணத்தில் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்கி இருந்தனர். வசதியான குடும்ப பின்னணியை கொண்ட பிரியங்கா, சாதாரண பின்னணி கொண்ட கிரணை திருமணம் செய்து இருந்தார். பிரியங்காவும் மருத்துவர் எனினும் தற்போது பணிக்கு செல்லவில்லை.

bangalore

ரத்த வெள்ளத்தில் சடலம்:

கிரண் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த நிலையில், தம்பதிகளுக்கு 8 வயதுடைய மகன் இருக்கிறார். இதனிடையே, கடந்த செவ்வாய்கிழமையனற்று கிரணின் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றபோது, கிரண் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்துள்ளார்.

கொலை:

அவரின் மகனும் கத்திக்குத்து காயத்துடன் உயிருக்கு போராடவே, அதிகாரிகள் விரைந்து சென்று சிறுவனை மீட்டனர். மேலும், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கிரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் இவர்களை பிரியங்கா கொலை செய்து தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதனால் பிரியங்காவை தேடி வரும் அதிகாரிகள், அவர் கைதானால் மட்டுமே கொலைக்கான மர்மம் விலகும் என தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரும்புக்காட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட பெண் சடலம்.. தேடி அலைந்த உறவினர்களுக்கு திடுக் துயரம்.!