அப்படிப்போடு.. குழந்தைகளின் நலனில் தவெக அரசு.. கலர் அப்பளம் விற்க அதிரடி தடை.. மாஸ் உத்தரவு.. ஆபத்து என்ன?



Tamil Nadu Bans Sale of Colored Papad Over Food Safety Concerns

குழந்தைகளை கவர அதிக நிறமூட்டி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அப்பளத்துக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் ஆசையாக கேட்கிறார்களே என வருத்தத்துடன் வாங்கிக்கொடுத்த பல பெற்றோர்களுக்கும், இதுபோன்ற பொருளுக்கு ஏன் தடை விதிக்கவில்லை என ஏங்கிக் காத்திருந்த சமூக ஆர்வலர்களுக்கும் இந்த செய்தி நல்லசெய்தியாக அமைந்துள்ளது.

கோரிக்கை:

Over Excess Artificial Colors: தமிழ்நாட்டில் உணவுக்கு தொடுகறியாக பல இயற்கை பதார்த்தங்கள் இருந்தாலும், நகரும் அதிவேக வாழ்க்கையால் மக்களும் அதன் ஓட்டத்துக்கு பழகிவிட்டனர். இந்த ஓட்டத்தை வியாபாரமாக பார்க்கும் நபர்கள் உற்பத்தி செய்யும் அதிக நிறம் சேர்க்கப்பட்ட கலர் அப்பளம் உடலுக்கு மிகவும் கேடுதரும். இந்த விஷயம் பல தாய்மார்களுக்கும் நன்கு தெரிந்தும் குழந்தைகள் கேட்கிறார்கள் என செய்து கொடுப்பார்கள். இதுபோன்ற பொருட்களுக்கு தடை வேண்டும் அல்லது அதன் தயாரிப்பு முறைகளில் இயற்கை நிறமிகளை கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும் என நெடுங்காலமாக கோரிக்கை இருந்து வந்தது.

இதையும் படிங்க: Bird Flu: தமிழகத்தில் பறவைக்காய்ச்சல்.. ஆப்-பாயில் சாப்பிடாதீங்க.. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

Trending

அதிரடி தடை:

மஞ்சள், பச்சை, சிவப்பு என குழந்தைகளை கவரும் நிறத்தில் உற்பத்தி செய்யும் கலர் அப்பளம், வத்தலில் அனுமதி கொடுக்கப்பட்ட அளவைவிட அதிக நிறமிகள், ரசாயனங்கள் சேர்க்கப்படுவது உறுதியாகி இருந்தது. இதுதொடர்பான தொடர் புகார்கள் எழுந்த நிலையில், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல இடங்களில் திடீர் அதிரடி சோதனை மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்தனர். சோதனையில் கலர் அப்பளம் பெரும்பாலானவை பாதுகாப்பு இல்லாதது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அதிகாரிகள் கலர் அப்பளம் விற்பனை செய்ய அதிரடி தடை விதித்துள்ளனர்.

Trending

ஆபத்துகள்:

மேலும், இவ்வகை கலர் அப்பளத்தை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் எனவும் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசாயனம், செயற்கை நிறமூட்டி நிறைந்த கலர் அப்பளம் செரிமான மண்டலத்தை பாதிக்கும். வயிற்றுப்புண், குடல் பாதிப்பு ஏற்படும். கல்லீரல், சிறுநீரகத்தில் இதன் ரசாயனங்கள் தங்கி, உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை பாதிக்கும். குழந்தைகளுக்கு கணவக்குறைவு, அலர்ஜியை ஏற்படுத்தும். வாராந்திர சந்தைகள், பொருட்காட்சிகளில் மக்கள் இவ்வகை உணவுகளை வாங்கி சாப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள், விற்பனையும் கூடாது என எச்சரித்துள்ளது. தமிழக உணவுப்பாதுகாப்புத்துறையின் இந்த நடவடிக்கை பாராட்டுகளை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு சம்பவம்.. லஞ்ச மோகத்தால் அமைச்சரிடம் சிக்கிய சூப்பர் சம்பவம்.!