ஒரு பயணிகள் கூட வருவதில்லை, உள்ளூர் மக்கள் கூட எட்டி பார்ப்பதில்லை.. அமானுஷ்ய பீதியை தரும் ரயில் நிலையம்..!



Bhopal Ghost Station: Why Nishatpura Railway Station Remains Abandoned Despite ₹6 Crore Upgrade

ரூ.6 கோடி செலவில் கட்டப்பட்ட ரயில் நிலையம் இதுவரை திறக்கப்படாமல் பேய்கள் நிலையம் என பெயர் பெற்றுள்ளது.

புதுப்பிப்பு:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் மாவட்டம், நிஷாதபுராவில் ரயில் நிலையம் உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு இந்த ரயில் நிலையம் ரூ.6 கோடி செலவில் ரயில்வே துறையால் புதுப்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தளபதி விஜய் முதல்வர்..! வெளியான தவெக உத்தேச அமைச்சரவை பட்டியல்! சர்ச்சையை கிளப்பிய போஸ்ட்....!!!

அனுமதி இல்லை:

ஆனால், தற்போது வரை இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் யாரும் வந்து செல்வதில்லை. ரயில்களும் நிற்பதில்லை. ரயில்வே ஊழியர்களும் வேலைக்கு அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

Madhya pradesh

பேய் நிலையம்:

அதாவது, ஒருசில காரணங்களுக்காக நிஷாதபுரா ரயில் நிலையத்துக்கு எந்த விதமான அனுமதியும் வழங்காமல் ரயில்வே கிடப்பில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது இந்த ரயில் நிலையம் பேய் நிலையமாக மாறி வருகிறது.

ட்ரெண்டிங்:

எந்த விதமான மக்களின் பயன்பாடும் இல்லாமல், ரயில்களும் நிற்காமல் வந்து செல்லும் சூழலில், சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை பகிர்ந்து வருகின்றனர். மக்கள் பயன்படுத்த நடைமேடை மேம்பாலம், உயர்ந்த நடைமேடை, பயணிகள் காத்திருப்பு அறை என வசதிகள் இருந்தாலும் ரயில்கள் நிற்காததால் நிஷாதபுரா ரயில் நிலையம் "Ghost Station" என்ற விமர்சனத்தை பெற்றுள்ளது. 

இதையும் படிங்க: 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி.?! தமிழகமே எதிர்பார்த்த புதிய தகவல்.?!