39 வருஷ தில்லாலங்கடி வேலை! 1987 டூ 2026... வீட்டில் ரத்த கறையோடு மைத்துனன் பிணம்! சின்ன விஷயத்தில் கிழிந்த கொடூரனின் முகமூடி! திடுக்கிடும் பின்னணி..!!!



kerala-murder-accused-arrested-after-39-years

கேரளாவில் 1987-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர், சுமார் 39 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸாரின் வலையில் சிக்கியுள்ளார். போலி அடையாளத்துடன் குடும்பம் அமைத்து சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர், ஒரு சிறிய தவறால் பழைய வழக்கில் மீண்டும் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

39 ஆண்டுகளாக மறைந்திருந்த கொலை வழக்கு

கொல்லம் மாவட்டம் வெளியம் கிராமத்தில் 1987 ஜனவரி 11-ஆம் தேதி இந்த கொலை நடந்தது. கள்ளச்சாராய வியாபாரியான சந்திரசேகரனுக்கும் அவரது மைத்துனர் மோகனனுக்கும் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், அருகில் இருந்த வீட்டிலிருந்து எடுத்த அரிவாளால் மோகனன் சந்திரசேகரனை வெட்டிக்கொன்றதாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆயுதத்தையும் உடலையும் அங்கேயே விட்டுவிட்டு அவர் தப்பிச் சென்றார்.

இதையும் படிங்க: அப்பா - மகள் உறவையே கொச்சப்படுத்திடீங்களே.... அப்பாவையே திருமணம் செய்து உடலுறவு கொண்ட மகள்! பந்தயத்துக்காக எடுத்த விபரீத முடிவு! நீதிமன்றத்தின் அதிரடி தண்டனை!!!

போலி பெயரில் புதிய வாழ்க்கை

போலீஸார் பல ஆண்டுகள் தேடியும் கிடைக்காத மோகனன், தமிழகத்தின் வேளாங்கண்ணியில் ராஜன் கேசவன் என்ற பெயரில் வாழத் தொடங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கோட்டயத்தைச் சேர்ந்த வல்சாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கை நடத்தினார். போலி அடையாள ஆவணங்களை பயன்படுத்தி, ரப்பர் தோட்டத்தில் வேலை செய்து சாதாரண மனிதராக வாழ்ந்ததாக தகவலின்படி தெரியவந்துள்ளது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கை அதிகாரி ஷாஜிமோன் தலைமையிலான போலீஸார் மீண்டும் விசாரணைக்கு எடுத்தனர். இதற்கிடையில், கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சென்றிருந்த மோகனன், தனது பூர்வீக குடும்பத்தைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரித்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஒருவர் போலீஸாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, தனிப்படை போலீஸார் கள்ளுக்கடை ஒன்றில் வைத்து அவரை கைது செய்தனர்.

தான் மோகனன் அல்ல, ராஜன் கேசவன் என அவர் மறுத்தாலும், சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று சகோதரிகள் முன்னிலையில் அடையாளம் காணப்பட்டபோது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது 64 வயதான அவரை மரபணு பரிசோதனை மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், அவரது கடந்த காலம் தெரியவந்ததைத் தொடர்ந்து மனைவியும் பிள்ளைகளும் அவருக்கு எந்த உதவியும் செய்ய மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதையும் படிங்க: அரசு வேலைக்காக பெற்ற தாயையே துடிதுடிக்க கொன்ற மகள்....! மாமா கூட சேர்ந்து போட்ட திட்டம்... விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!!