சூர்யாவுடன் நடிப்பது குறித்து நெகிழ்ந்த இளம் நடிகை.. கண்களை எடுப்பது மிகவும் கடினம்!
மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த 20 வயது இளைஞன்.. ஸ்கெட்ச் போட்ட தம்பதி.. அரங்கேறிய சம்பவம்.!
பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய 20 வயது கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவர்:
குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகரில் தம்பதி வசித்து வருகின்றனர். இதே பகுதியில், ஹர்திக் என்ற 20 வயதுடைய கல்லூரி மாணவரான இளைஞர் ஒருவரும் வசிக்கிறார். தம்பதியில் பெண் குளிப்பதை இளைஞர் வீடியோ பதிவு செய்து வந்ததாக தெரியவருகிறது.
இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!
பாலியல் தொல்லை:
சம்பவத்தன்று இந்த வீடியோவை காண்பித்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறிப்போன பெண்மணி முதலில் தவித்தாலும், பின் கணவரிடம் தகவலை தெரியப்படுத்தி இருக்கிறார்.

கொலைக்கு உறுதுணை:
இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியிடம் பேசி இளைஞரை கொலை செய்ய சம்மதம் வாங்கி இருக்கிறார். சம்பவத்தன்று இவர்களின் திட்டப்படி தம்பதியின் வீட்டுக்கு இளைஞரை வரவழைத்துள்ளனர்.
அரங்கேற்றம்:
அங்கு இதுதொடர்பாக இளைஞரை கண்டித்துக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் எழவே, ஆத்திரத்தில் தம்பதிகள் இளைஞரை கொலை செய்துள்ளனர். கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொலை நடந்துள்ளது. பின் இளைஞரின் செல்போனில் இருந்த வீடியோவை அழித்து இருக்கின்றனர்.

அதிகாரிகள் விசாரணை:
இதனிடையே, இளைஞர் கொலை குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தம்பதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இளைஞரின் செல்போனும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர்கள் பெண்ணின் தந்தை வீட்டில் இருக்கின்றனர்.
அறிவுரை:
இதுபோன்ற குற்றங்களுக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தால் அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள் என்றும், யாரும் இதுபோல கொலை சம்பவத்தில் ஈடுபட கூடாது எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்.. 32 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை? நிர்வாணமாக சடலம் மீட்பு.!