பொதுமக்கள் கண்முன் பேருந்து நிலையத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!



Young Nurse Murdered in Public at Karnataka Bus Stand; Suspect on the Run

வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்வழியில் இளம்பெண் கொலை செய்யப்பட்டார். மக்கள் முன்னிலையில் பதறவைக்கும் சமபவம் நடந்தது.

செவிலியர்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள பண்ட்வால், காக்யபாடா, கொடங்கே பகுதியில் வசித்து வருபவர் பாலப்ப கவுடா. இவரின் மகள் லாவண்யா (வயது 25). இவர் கல்கட்க்கா பகுதியில் செயல்படும் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வழக்கம்போல பணிக்குச் சென்ற பெண், மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த பயங்கரம்.. வயலில் நடந்தது என்ன? கிருஷ்ணகிரியை அதிரவைக்கும் கொடூரம்.!

காத்திருந்தார்:

இவர் அங்குள்ள பி.சி. சாலை பேருந்து நிறுத்தம், காக்யபாதவி செல்லும் பேருந்தில் ஏறி இருக்கிறார். அச்சமயம், பேருந்து நிறுத்தத்தில் காரில் காத்திருந்த இளைஞர், பேருந்தில் உட்கார்ந்து இருந்த இளம்பெண் நோக்கிச் சென்று வாளை எடுத்து வெட்ட முயற்சித்துள்ளார்.

karnataka

கொலை:

இதனால் பதறிப்போன இளம்பெண் தப்பி ஓடிய நிலையில், விடாது துரத்திய இளைஞர் பேருந்து நிறுத்தத்திலேயே பெண்ணை கொடூரமாக கொலை செய்தார். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த கொலை சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின் வாளை அங்கேயே வீசிவிட்டு இளைஞர் தப்பிச் சென்றார்.

வலைவீச்சு:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இளம்பெண்ணை இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்தது உறுதியானது. இளைஞருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: காதலியை பார்த்துவிட்டு வரும்வழியில் இளைஞருக்கு நடத்த கோர மரணம்.. சென்னையில் ஷாக்.!