Bird Flu: தமிழகத்தில் பறவைக்காய்ச்சல்.. ஆப்-பாயில் சாப்பிடாதீங்க.. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை.!
ஆப்-பாயில் சாப்பிட வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பரவி வரும் பறவைக்காய்ச்சலை கட்டுப்படுத்த, மாநில சுகாதாரத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த விஷயம் குறித்து இன்று (பிப்.10) அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அறிவுறுத்தல்:
அவரது பேட்டியில், "பறவைக்காய்ச்சல் என்பது மத்திய அரசு சார்பில் மக்கள் நலவாழ்வுத்துறைக்கு பல மாநிலங்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நமக்கு தகவல் கிடைத்ததும், பொது சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோழி, காகம் போன்றவை இறந்தால் ஆழமாக குழிதோண்டி புதைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறந்த கோழியை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த எடுத்துரைக்கப்ட்டுள்ளது.
இதையும் படிங்க: Bird Flu: பறவைக்காய்ச்சல் அபாயம்.. கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்திய தமிழக சுகாதாரத்துறை.!

ஆப்-பாயில் வேண்டாம்:
இறந்த கோழியை சாப்பிட கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சியை சாப்பிடுபவர்கள் நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். ஹாப் பாயில் எனப்படும் பாதி வேகவைக்கப்பட்ட முட்டையை சாப்பிட வேண்டாம். தலைமை செயலகத்தில் இதுதொடர்பான ஆலோசனையும் நடைபெற்றுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு அவசியம்:
மாவட்ட அளவில் சுகாதார செயலாளர்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்பு மனிதர்களுக்கு பரவில்லை. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.