என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்னு நினைச்சு என்னோட புருஷன் காலை மட்டும் விடல.! விமானத்தில் நடுவானில் ஜன்னல் உடைந்து நடந்த அந்த 2 நிமிட மரண கொடுமை ! அதிர்ச்சி காட்சி..!!!
கிரீஸின் தெசாலோனிக்கியில் இருந்து ஜெர்மனி நோக்கி சென்ற Ryanair போயிங் 737 விமானத்தில் நடுவானில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஜன்னல் அருகே அமர்ந்திருந்த 61 வயது செர்பிய பயணி ஒருவர் விமானத்திற்கு வெளியே இழுக்கப்பட்ட நிலையில், அவரது மனைவியும் சக பயணிகளும் இணைந்து உயிருடன் மீட்ட சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
எஞ்சின் கோளாறால் ஏற்பட்ட பரபரப்பு
ஜூலை 10 அன்று தெசாலோனிக்கியில் இருந்து புறப்பட்ட Ryanair FR1879 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் உடைந்த உதிரிபாகம் ஜன்னலைத் தாக்கியதில் கேபினுக்குள் காற்றழுத்தம் வேகமாக குறைந்தது. இதையடுத்து ஆக்ஸிஜன் முகக்கவசங்கள் தானாக கீழிறங்கியதால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: நடுவானில் பறந்த விமானத்தில் பற்றி எரிந்த தீ! அலறி கூச்சலிட்ட பயணிகள்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
மனைவியின் துணிச்சலால் உயிர் தப்பிய பயணி
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த லியுபிஷா கரோவிச்சின் உடலின் மேற்பகுதி திடீர் காற்றழுத்தத்தால் விமானத்திற்கு வெளியே இழுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவரது மனைவி, அருகிலிருந்த பயணிகளின் உதவியுடன் அவரது காலை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு சுமார் இரண்டு நிமிடங்கள் போராடி மீண்டும் உள்ளே இழுத்து காப்பாற்றினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், அந்த சில நிமிடங்கள் தங்களுக்கு நரக அனுபவமாக இருந்ததாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அவசர தரையிறக்கம்
முகம் மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த கரோவிச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விமான அவசர தரையிறக்கம் மேற்கொண்ட விமானிகளின் நடவடிக்கையால் விமானம் பாதுகாப்பாக மீண்டும் தெசாலோனிக்கி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதன்பின் மற்ற பயணிகள் மாற்று விமானம் மூலம் பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விரிவான விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், சர்வதேச அளவிலும் இது பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
Ryanair FR1879 out of Thessaloniki to Germany today. Boeing 737-8AS takes off, something from the engine breaks loose and smashes a window mid-climb. Boom.. cabin decompresses, masks drop, and a 61-year-old Serbian guy next to it gets partially sucked toward the hole! His wife… pic.twitter.com/XIAWMd8pJf
— Fahad Naim (@Fahadnaimb) July 10, 2026
இதையும் படிங்க: 36,000 அடி உயரத்தில் நடந்தது என்ன? விமானத்தை தட்டிச் சென்ற மர்ம மோதல்! கண்ணாடி சிதறி பைலட் காயம்! அவசரமாக தரையிறக்கிய விமானம்....