படுத்த படுக்கையாக கிடந்த கணவனின் கடைசி ஆசை! ஒரே ஒரு முறை காட்டிடுங்க... மனைவி செய்த துரோகம்! கடைசி வரை காணாமலே துடிதுடித்து போன உயிர்!!!
ஒடிசாவில் குடும்பத் தகராறால் பிரிந்திருந்த இளைஞர் ஒருவர், உயிரிழப்பதற்கு முன் தனது மகளை கடைசியாக பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் மருத்துவமனையில் போராடியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த விருப்பம் நிறைவேறாமல் அவர் உயிரிழந்தது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறுக்குப் பிறகு பிரிவு
ஒடிசாவைச் சேர்ந்த ஸ்வப்னேஷ்வர் மிஸ்ரா மற்றும் அவரது மனைவி அனாமிகா ஆகியோருக்கு நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட தகராறின் போது, கணவரை அனாமிகா தாக்கியதாகவும், அதில் ஸ்வப்னேஷ்வரின் தலையில் தையல் போடும் அளவுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தனது குழந்தையை அழைத்துக்கொண்டு அனாமிகா பெற்றோர் வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மகளின் செல்போன் 3 நாட்களாக சுவிட்ச் ஆப்.... என் பொண்ணு எங்கே? கேள்வி கேட்ட தாயின் மூக்கை அறுத்து எரிந்த கொடூரம். பதற வைக்கும் பின்னணி..!!
மருத்துவமனையில் இறுதி ஆசை
இதற்கிடையில், நாள்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்வப்னேஷ்வர், கடந்த ஜூலை 9ஆம் தேதி கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமடைந்த நிலையில், தனது மகளை ஒருமுறை மட்டுமாவது பார்க்க வேண்டும் என்று அவர் மருத்துவமனைப் படுக்கையிலேயே விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தையை அவரிடம் அழைத்து வரவில்லை என்றும், மகளின் முகத்தைப் பார்க்க முடியாமலேயே அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
போலீஸ் விசாரணை தீவிரம்
உயிரிழந்த ஸ்வப்னேஷ்வரின் தந்தை பிரபுல்லா மிஸ்ரா, தனது மகனின் மரணத்திற்கு மருமகளின் தாக்குதலும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலும் காரணம் என்று லக்ஷ்மிஜோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பிரேதப் பரிசோதனை அறிக்கையை எதிர்பார்த்து அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராகி வருகின்றனர்.