ஆபாச ஓவியம்.. புக்குக்கு அட்டையில்லனா.. உன் துணியையும் உறுவி விடுவேன்..! மாணவிகளிடம் அசிங்கமாக நடந்துகொண்ட ஆசிரியர்! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்களின் அதிரடி வீடியோ..!!!



madhya-pradesh-kendriya-vidyalaya-teacher-misconduct-al

மத்தியப் பிரதேசத்தின் கஞ்ச்பசோதாவில் செயல்பட்டு வரும் பி.எம். ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உயிரியல் ஆசிரியர் ஒருவர்  மாணவிகளிடம் மீது அத்துமீறி நடந்துகொண்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

மாணவிகள் கூறிய குற்றச்சாட்டுகள்

பெற்றோரிடம் மாணவிகள் தெரிவித்த தகவலின்படி, ஆசிரியர் வகுப்பறையில் பாடம் நடத்துவதற்குப் பதிலாக ஆபாசமான ஓவியங்களை வரைந்ததாகவும், மாணவிகளிடம் தரக்குறைவான வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சில சந்தர்ப்பங்களில் உடல் ரீதியாக அத்துமீறல் செய்ததாகவும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: எப்படி இத செய்ய மனசு வந்துச்சு... 7-வது மாடியிலிருந்து மகனை கயிறு கட்டி தொங்கவிட்ட தந்தை! குடிபோதையில் செய்த அதிர்ச்சி செயல்! வீடியோ எடுத்து வெளியிட்ட நண்பர்கள்..!!

நோட்டுப் புத்தகத்தில் அட்டை இல்லாததை காரணம் காட்டி, மாணவிகளிடம் உன் உடைகளை உருவி விடுவேன் என அச்சுறுத்தும் வகையில் ஆசிரியர் பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக எட்டாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பில் படிக்கும் மாணவிகள் தெரிவித்த தகவல்கள் பெற்றோர்களிடையே கவலையை அதிகரித்துள்ளன.

அதிகாரிகள் விசாரணை தொடக்கம்

புகார்கள் வெளியாகியதைத் தொடர்ந்து எஸ்.டி.எம் அனுபவ் ஜெயின் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவிகள், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம் அதிகாரிகள் தனித்தனியாக விளக்கம் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் மறுப்பு

தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆசிரியர் மறுத்துள்ளார். இந்த புகார்கள் பொய்யானவை என்றும், பழிவாங்கும் நோக்கத்தில் கூறப்படுகின்றன என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: ஐயோ... கடவுளே! பள்ளி வகுப்பறையில் கத்தி குத்து... 5-ம் வகுப்பு பிஞ்சு குழந்தைகளை அடுத்தடுத்து கத்தியால் குத்திய 8 ஆம் வகுப்பு மாணவி! உலகையே உலுக்கிய வீடியோ...!!!