ஒரு அடி கூட எடுத்து வைக்காதீங்க... அப்டியே படுத்துகோங்க!இல்லைனா இழுத்துட்டு போயிடும்... சுரங்கப்பாதை வளைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த விபரீதம! திக் திக் வீடியோ!!!
மகாராஷ்டிராவின் மல்ஷேஜ் காட் மலைப்பாதையில் திடீரென வீசிய பலத்த காற்று காரணமாக பல இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் நிலைதடுமாறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பருவமழை சுற்றுலா பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
ஆபத்தான வளைவில் திடீர் காற்றின் தாக்கம்
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நீர்வீழ்ச்சிகளும் பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகளும் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மல்ஷேஜ் காட் பகுதிக்குச் சென்று வருகின்றனர். அப்போது சுரங்கப்பாதைக்கு அருகிலுள்ள ஆபத்தான வளைவில் எதிர்பாராத வகையில் மிக வேகமாக காற்று வீசியதால், அந்த வழியாக சென்ற பல பைக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக சாலையில் சரிந்தன.
உள்ளூர் மக்கள் விரைந்து உதவி
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், வாகன ஓட்டிகளால் தங்களது பைக்குகளை நேராக நிறுத்துவதற்கே சிரமம் ஏற்பட்டது. சில பாதசாரிகள் கூட காற்றின் வேகத்தில் தள்ளிச் செல்லப்படாமல் இருக்க தரையில் சாய்ந்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர். இதையடுத்து அங்கிருந்த உள்ளூர் மக்களும் மற்ற சுற்றுலாப் பயணிகளும் உடனடியாக ஓடிவந்து கீழே விழுந்தவர்களையும் அவர்களது வாகனங்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.
வைரலாகும் வீடியோ
அதிர்ஷ்டவசமாக இந்த நிகழ்வில் யாருக்கும் உயிரிழப்போ, பெரிய அளவிலான காயமோ ஏற்படவில்லை. இருப்பினும் ஆபத்தான வளைவில் மல்ஷேஜ் காட் பகுதியில் பல வாகனங்கள் ஒரே நேரத்தில் சறுக்கி விழும் வீடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பருவமழை காலங்களில் மலைப்பாதைகளில் பயணம் செய்பவர்கள் வானிலை நிலவரத்தை கவனித்து, கூடுதல் எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்ட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
माळशेज घाटात वादळी वाऱ्याचा थरार, अनेक दुचाकी रस्त्यावर कोसळल्या; VIDEO पाहून अंगावर येईल काटा #malshej #malshejghat #malshejvideo pic.twitter.com/fumcSPRiAM
— TV9 Marathi (@TV9Marathi) July 15, 2026
இதையும் படிங்க: பெற்றோர்கள் உஷார்... சில நொடியில் தலைகீழான மாறிய நிலை! ஸ்கூட்டியில் அமர்ந்த சிறுமி செய்த விபரீதம்... அதிர்ச்சி வீடியோ..!!!