தமிழகம் காதல் – உறவுகள்

திருமணமான 15 நாளில், காதல் மனைவியுடன் புதுவாழ்க்கையை தொடங்கிய இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வெளியான பரபரப்பு சம்பவம்!

Summary:

Husband xomplaint wife kidnapped by her parents

கோவை இடையர்பாளையம்  லூனா நகர், வித்யா காலனியில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழினி பிரபா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டைவிட்டு வெளியேறிய  தமிழினி பிரபா, கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகேயனுடன் பதிவு திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து காதல் மனைவியுடன் புது வாழ்க்கையை தொடங்கிய   கார்த்திகேயனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 

திருமணம் முடிந்து தமிழினி பிரபா கார்த்திக்கேயன் மற்றும் அவரது குடும்பத்தாருடன் வசித்து வந்த நிலையில் நேற்று அவர்களது வீட்டிற்குள் நுழைந்த தமிழினி பிரபாவின் தந்தை, தாய் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர்  கார்த்திகேயன் மற்றும் அவரது தாயை தாக்கிவிட்டு தமிழினி பிரபாவை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இதுகுறித்து கார்த்திகேயன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

மேலும்  கார்த்திகேயன் வீட்டில் வசதி இல்லை எனவும், வேறு  சமூகத்தைச் சேர்ந்தவர்கள்  என்பதால் பெண் வீட்டார் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை,  பெண்ணை அழைத்துசென்று விட்டனர் எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement