தமிழகம்

மனைவியின் தங்கை குளிப்பதை ஆபாச படம் எடுத்த கணவர்..! அதை வைத்து அவர் செய்த காரியம்..!

Summary:

Husband takes wife sister photos while taking bath

தனது மனைவி தன்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றால் மனைவியின் தங்கையோட அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என கணவர் மிரட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ் வயது 31. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவரும் இவருக்கும், 28 வயதாகும் அஞ்சலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 வருடங்களுக்குக்கு முன்னர் திருமணம் முடிந்து 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குடிக்கு அடிமையான தினேஷ் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இதனால், கோவித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் அஞ்சலி. இந்நிலையில் அஞ்சலியின் 22 வயது தங்கை தினேஷ் வீட்டிற்கு வந்த சமயங்களில் அவர் குளிக்கும்போது அவருக்கு தெரியாமல் அவரை புகைப்படம், வீடியோ எடுத்து வைத்துள்ளார் தினேஷ்.

இந்த புகைப்படங்களை அஞ்சலியின் உறவினர்களுக்கு அனுப்பி, அஞ்சலி தன்னுடன் வந்து வாழவில்லை என்றால் அவரது தங்கையின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன உறவினர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்  தினேஷ் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement