மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கணவன்.! மனைவி கேட்ட ஒரே கேள்வி.! தற்கொலை செய்துகொண்ட கணவன்.!
மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கணவன்.! மனைவி கேட்ட ஒரே கேள்வி.! தற்கொலை செய்துகொண்ட கணவன்.!

மதுவினால் நாளுக்கு நாள் பல குடும்பங்கள் நாசமாகி வருகிறது. ஊரடங்கு சமயத்தில் பலர் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வரும் நிலையில், சிலர் குடும்ப வறுமையை கண்டுகொள்ளாமல் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்தநிலையில், மது குடித்துவிட்டு வந்த கணவனை மனைவி திட்டியதால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். 42 வயது நிரம்பிய கூலித் தொழிலாளியான இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த மனைவி, தினமும் குடித்துவிட்டு வருகிறீர்களே, உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் நமது குழந்தைகளை யார் பார்ப்பது என்று கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது.
மனைவியின் கேள்விகளுக்கு பதில்சொல்லமுடியாமல் குற்ற உணர்ச்சியில், சவுந்தரராஜன் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சவுந்தரராஜன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.