தமிழகம்

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை குத்திக்கொன்ற மர்ம நபர்கள்! அம்பலமான சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி பின்னணி!

Summary:

Husband plan and killed wife property

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை, பாரதி உலா வீதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன்- சீனியம்மாள் தம்பதியினர். மாரியப்பன் பாத்திர கடை வைத்துள்ளார். இவர்களுக்கு 2 மகள்களும், குமரகுரு என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் மாரியப்பன் கடந்த 10வருடங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவரது கடையை மனைவி சீனியம்மாளும், மகன் குமரகுருவும் கவனித்து வந்துள்ளனர்.  குமரகுருவின் மனைவி லாவண்யா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு லாவண்யா தனது இரு மகள்களுடன் வீட்டின் முதல் தளத்தில் தூங்கியுள்ளார். மேலும் தரைதளத்தில் உள்ள அறை ஒன்றில் குமரகுருவும், ஹாலில்  சீனியம்மாளும் படுத்து தூக்கியுள்ளனர்.  இந்நிலையில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் நேராக முதல் தளத்திற்கு சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த லாவண்யாவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த அவரது மகள்  பதற்றத்துடன் கீழே வந்து அவரது பாட்டியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

பின்னர் மர்மநபர்கள் கீழே இறங்கி வந்த போது அவர்களை தடுத்த சீனியம்மாளையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அதனை தொடர்ந்து போலீசார்கள் தற்போது கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் கணவர் குமரகுருதான் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

குமரகுருவின் தந்தை இறந்த பிறகு கடையை அவரது தாயும், மனைவி லாவண்யாவும் கவனித்து வந்துள்ளனர். மேலும் சொத்துக்களை பாதி குமரகுருவின் பெயரிலும், மீதி லாவண்யா பெயரிலும் எழுதி கொடுத்துள்ளனர். இந்நிலையில் குமரகுரு தனது சொத்துக்கள் அனைத்தையும் செலவு செய்து விட்ட நிலையில் மனைவியின் சொத்தை கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்தநிலையில் கோபமடைந்த குமரகுரு கூலிப்படையை ஏவி திட்டமிட்டு மனைவியை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement