தமிழகம்

பலமுறை கூறியும் என் மனைவி கேட்கவில்லை. அதனால் அவரை? கணவன் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்.

Summary:

husband-killed-his-wife-and-throw-into-well

பொள்ளாச்சியை அடுத்து ஆர். பொன்னாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணிற்கும் 8 வருடங்கள் முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில் கவுசல்யாவை காணவில்லை என்று அவரது கணவர் சக்திவேல் கடந்த 27 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரணையில் இறங்கிய போலீசார் சக்திவேலின் உறவினர்களிடம் விசாரித்ததில் கணவன் மனைவி இருவரிடையே அடைக்கட்டி சண்டை வரும் எனவும் சக்திவேல் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் சக்திவேலை போலீசார் விசாரிக்க போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தனது மனைவியை நான்தான் கொலை செய்ததாக சக்திவேல் ஒப்புக்கொண்டார். மேலும், இதுபற்றி அவர் கூறுகையில் எனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் எழுந்தது. இது சம்மந்தமாக எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும்.

நான் பலமுறை கூறியும் அவர் மாற்றிக்கொள்ளவில்லை, கடந்த 26 ஆம் தேதி இது சம்மதமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் கோவத்தில் அவரை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிவிட்டதாகவும், பின்னர் நானே அவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் சக்திவேல் கூறியுள்ளார்.


Advertisement