12 வருட திருமண வாழ்க்கை.! மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்.! நள்ளிரவில் நடந்த பயங்கரம்.!

12 வருட திருமண வாழ்க்கை.! மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்.! நள்ளிரவில் நடந்த பயங்கரம்.!


husband killed his wife

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு உமா என்ற பெண்ணுடன் கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ரமேஷ் வெள்ளிச்சந்தை காவல் நிலையம் அருகில் வாகனங்களுக்கு சீட் கவர் செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

ரமேஷ் கடை நடத்தி வரும் நிலையில் டெய்லரிங் படித்த உமா வீட்டிலேயே இருந்து தெரிந்த நபர்களுக்கு துணி தைத்து கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளார். இதனால் உமாவின் வீட்டிற்கு அடிக்கடி வெளிநபர்கள் பலர் வந்து சென்றுள்ளனர். இதனால் ரமேஷ், தனது மனைவி மீது சந்தேகம் அடைந்துள்ளார். இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

Wifeஇந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் அனைவரும் படுத்து தூங்கினர். நள்ளிரவில் ரமேஷின் வீட்டில் இருந்து உமாவின் குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, உமா கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

இதனையடுத்து உமாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உமா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ரமேஷை தேடி வருகின்றனர்.