தமிழகம்

எவ்வளவு சொல்லியும் கேட்கல.. மருமகனுடன் சேர்ந்து பெற்ற மகளையே தீர்த்துக்கட்டிய தாய்! வெளிவந்த பகீர் பின்னணி!!

Summary:

கள்ளத்தொடர்பை கைவிடாததால், மருமகனுடன் சேர்ந்து மகளை தாய் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை

கள்ளத்தொடர்பை கைவிடாததால், மருமகனுடன் சேர்ந்து மகளை தாய் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி பகுதியைச்  சேர்ந்தவர் கல்யாணகுமார். இவர் கட்டட தொழிலாளியாக உள்ளார். அவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் திடீரென ரஞ்சிதா இறந்துவிட்டதாக கூறி அவரது குடும்பத்தினர்கள் மயானத்தில் வைத்து அவரது உடலை எரிக்க ஏற்பாடு செய்துள்ளனர். 

 இந்த தகவல் போலீசுக்கு தெரியவந்த நிலையில் அங்கு விரைந்த அவர்கள் பாதி எரிந்த நிலையில் இருந்த ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் கல்யாணகுமார், ரஞ்சிதாவின் தாயார் கவிதா ஆகியோருடன தீவிர விசாரணை மேற்கொண்ட போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 

 அதாவது ரஞ்சிதாவுக்கு ஆனைமலையன்பட்டியைச் சேர்ந்த திருமணமான நபருடன் தகாத உறவு இருந்துள்ளது. இது தெரிய வந்தநிலையில் கல்யாணகுமார் அவரை கண்டித்துள்ளார். ஆனால் ரஞ்சிதா அதனை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து அந்த அவரை சந்திப்பது, தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஆத்திரமடைந்த கல்யாணகுமார் மற்றும் ரஞ்சிதாவின் தாயார் இருவரும் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் கல்யாணகுமார், ரஞ்சிதாவின் தாயார் இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement