தமிழகம்

அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் இனி உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பீர்களா?? ஆலங்குடி ஆசிரியர் அதிரடி!

Summary:

govt school teacher admition to his daughter


தற்போது அனைத்து மக்களும் தனியார் பள்ளிகளை, அதிகப்படியாக விரும்புகின்றனர். அதற்கு காரணம் அவர்களின் அறியாமை என்றே கூறலாம்.  தற்போது அரசு பள்ளியில் மிகவும் தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனாலும் அப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் தயங்குகின்றனர்.

பெற்றோர்கள் கூலி வேலை செய்து வந்தாலும், தனது குழந்தை தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற மனநிலை பலருக்கும் தற்போது இருந்து வருகிறது. அவர்களிடம் கேட்டால், தான் பெற்ற கஷ்டத்தை தனது குழந்தைகள் பெறக்கூடாது என்று கூறுவார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று. பெரும்பாலான தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியைகள் அரசு பள்ளி ஆசிரியர் வேலைக்காக விண்ணப்பித்து தேர்வு எழுதி தகுதி பெறாமல், வேறுவழியின்றி தனியார் பள்ளியில் பணிபுரிகின்றனர். 

 ஆனால் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஆசிரியைகள், நன்கு படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று வேலைக்கு சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனாலும் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். தனது குழந்தைகள் பன்னிரண்டாம் வகுப்பு படித்த பிறகு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளை மட்டுமே தேடி அலைகின்றனர்.

ஆனால் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைப்பதில்லை. அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஆசிரியைகள் இந்த மாற்றத்தினை கொண்டு வந்தாலே பல ஏழை எளிய மக்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பார்கள்.

இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிபரியும் சையது இப்ராம்ஷா அவர்கள் .அரசு பள்ளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து அனைவருக்கும் முன் உதாரணமாக உள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இதனை அனைவரும் பகிர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.


Advertisement