தங்கம் விலை கிடுகிடுவென குறைவு..! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்.! இன்றைய விலை நிலவரம்.!

தங்கம் விலை கிடுகிடுவென குறைவு..! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்.! இன்றைய விலை நிலவரம்.!



gold-rate-reduced-8YU9B8

கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்ததால் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். அந்த சமயத்தில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால் தேவை அதிகரித்து, தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டது. 

இதன்காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. கொரோனா சமயத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. தற்போது நாடுமுழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்துவருவதால், தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது.

gold rate

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,183க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.33,464க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.