தமிழகம்

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை! சோகத்தில் இல்லத்தரசிகள்!

Summary:

gold rate increased

கடந்த 2 நாட்களாக விலை குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று ரூ. 31 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 6 மாதங்களாகவே  சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 256 உயர்ந்து, 31 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது. சென்னையில் நேற்று மாலை ஒரு கிராம் ரூ.3856-க்கும், ஒரு பவுன் ரூ.30,848-க்கும் விற்பனை ஆனது. ஆனால் இன்று கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3888-க்கும், பவுனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.31,104-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல 24 கேரட் தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.40819 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.32,648 விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 49.70 காசுகளாக அதிகரித்து கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ஒரு கிலோ ரூ.49,700-க்கும் விற்பனையாகிறது.


Advertisement