தமிழகம்

மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை.! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!

Summary:

கொரோனா சமயத்தில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்ததால் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும்

கொரோனா சமயத்தில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்ததால் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்து வந்தது.

கொரோனா சமயத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. இந்தநிலையில் சமீபத்தில் நாடுமுழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்துவந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வந்தது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4226 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4162ஆக இருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 512 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4,226 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 33,808 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ரூ.900 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 68.50 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 68,500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 


Advertisement