கணவன் இறந்த சில மாதத்தில் மறுமணம் செய்த இளம் பெண். கணவனின் அண்ணன் செய்த கொடூர செயல்.

கணவன் இறந்து சில மாதங்களிலையே மனைவி மறுமணம் செய்துகொண்டதால் ஆத்திரம் அடைந்த கணவனின் சகோதரர் அவரை அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சிம்மக்கல் அருகே அனுமன் படித்துறை என்னும் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மனைவி மகேஸ்வரி.
முத்துக்குமார் உடல்நல குறைவால் சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இந்நிலையில், கணவன் இறந்து சில மாதங்களே ஆன நிலையில் மகேஸ்வரி இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டின் வெளியே தனியாக நின்றுள்ளார் மகேஸ்வரி.
அப்போது முதல் கணவர் முத்துக்குமாரின் அண்ணன் குமார் உள்ளிட்ட 4 பேர் அங்கு வந்துள்ளனர். முத்துக்குமார் இறந்து சில மாதங்களிலையே மறுமணம் செய்தது சரியா என கூறி பிரச்சனை செய்துள்னனர். ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த குமார் தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் மகேஸ்வரியை ஓட ஓட விரட்டி வெடியுள்னனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உறவினர்கள் மகேஸ்வரியை மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் மகேஸ்வரிக்கு சிகிச்சை நடைபெற்றுவருகிறது. மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள குமார் மற்றும் அவரது நாண்பர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.