குடிசையோடு தாயை எரித்து கொன்று நாடகமாடிய பெண்! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்

சென்னை குரோம்பேட்டையில் சேர்ந்த நந்தினி என்ற பெண் தன்னுடைய காதலை எதிர்த்த தாயாரை உயிரோடு எரித்து கொலை செய்து உள்ளார். முதலில் நாடகமாடிய அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்ததில் உண்மை வெளியானது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த வயதான பெண்மணி பூபதி. இவர் குரோம்பேட்டையில் மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தார். இவருடன் இவரது இளைய மகள் நந்தினியும் வசித்தார்.
கடந்த 7ம் தேதி நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டுக்குள் இருந்த பூபதி தீயில் கருகி இறந்து விட்டார். அருகிலிருந்தவர்கள் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டதாக கருதினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் பூபதியின் மகள் நந்தினியிடம் விசாரித்ததில் அவரும் தானாகவே தீப்பற்றி விட்டதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் நந்தினியின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேலும் விசாரணையை நெருக்கிய போலீசார் நந்தினியிடமிருந்து நடந்த உண்மைகளை கேட்டறிந்தனர். அதில் தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயாரை அவரே எரித்துக் கொன்றது அம்பலமானது.
நந்தினிக்கும், திருநீர்மலையை சேர்ந்த முருகன் என்பவருக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தாய், நந்தினியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தினி தாய் பூபதி அசதியில் படுத்துக் கொண்டிருந்தபோது, காதலனோடு சேர்ந்து தீவைத்து கொளுத்தியுள்ளார். பின்னர் யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு, தானாக தீப்பற்றியது என நந்தினி நாடகமாடியுள்ளார்.
இதனை தொடர்ந்து நந்தினியைம், அவரது காதலன் முருகனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.