பெரும் சோகம்.. தந்தையின் உடல்நலம் குறித்த கவலையில் உயிரை விட்ட மாணவி..! பாசத்தால் பறிபோன உயிர்..! சோகத்தில் உறவினர்கள்.!!



Girl conduct suicide for her father

12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தந்தையின் உடல்நலம் குறித்து கவலைப்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் அடுத்த ரங்கநாதபுரம் செங்காடு பகுதியில் வசித்து வருபவர் ராமக்கண்ணன் - பிரியா தம்பதியினர். ராமக்கண்ணன் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். 

தம்பதிகளுக்கு கிருத்திகா என்ற ஒரு மகள் இருந்தார். இவர் நம்பியூர் அருகே கெடாரையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

தற்போது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்த நிலையில், மாணவி பொதுத்தேர்வு எழுதிமுடித்து வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்த நிலையில், தந்தையின் மீது அதிகபாசம் கொண்ட கிருத்திகா, அவரது உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததை கண்டு மிகவும் மனவேதனை அடைந்து தனிமையில் இருந்துள்ளார். studentஇதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு மாணவி தற்கொலை செய்துள்ளார்.

பின் வெளியே சென்றவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கிருத்திகா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முன்பே உயிரிழந்துவிட்டதாக கூறியதை தொடர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.