தமிழகம் Covid-19

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு - சென்னை மாநகராட்சி ஆணையர்!

Summary:

Free food at amma unavagam at chennai

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் இந்நேரத்தில் ஏழை மக்களின் பசியை போக்க சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டன. இந்த உணவகங்களில் ஏழைகள் பயன்பெறும் வகையில் மலிவான விலையில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் ஏழைகளின் பசியை போக்க அம்மா உணவகங்கள் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதனால் வேலைவாய்ப்பில்லாத பல ஏழைகள் பயனடைவர்.


Advertisement