
Fire
சிவகாசியில் திருமணமான தம்பதியினருக்கு 14 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மனைவியை தீ வைத்து எரித்த சோக சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
சிவகாசி மாவட்டம் தேவி கிருபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி -வித்யா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
மேலும் பாண்டி அச்சு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சந்தோசமாக சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் குழந்தை இல்லாத கவலை மட்டும் இருந்து வந்துள்ளது.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாய் தகராறுகளும் சில வாக்கு வாதங்களும் அவ்வப்போது ஏற்ப்பட்டு வந்துள்ளது. அதேபோல் சமீபத்தில் இவர்களுக்கு இடையே சண்டை ஏற்ப்பட்டுள்ளது.
அதில் பொறுமை இழந்த பாண்டி வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து மனைவியின் மேல் ஊற்றி தீ வைத்துள்ளார். வித்யாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் அங்கு வித்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement