காட்டுப்பன்றி என நினைத்து விவசாயி சுட்டுக்கொலை..! மேலும் 3 பேர் கைது.!

காட்டுப்பன்றி என நினைத்து விவசாயி சுட்டுக்கொலை..! மேலும் 3 பேர் கைது.!


Farmer shot dead for thinking he was a wild boar

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள வன்னிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா. 40 வயது நிரம்பிய இவர் விவசாயம் செய்துவந்துள்ளார். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி பக்கத்துக்கு கிராமத்தை சேர்ந்த வீரபத்திரன் மகன் நாகராஜ் என்பவர் அங்குள்ள வனப்பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியுடன் சென்றுள்ளார்.

அப்போது காட்டுப்பன்றி என நினைத்து விவசாயம் வேலை செய்துகொண்டிருந்த பசப்பாவை சுட்டுக்கொலை செய்துள்ளார் நாகராஜ். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நாகராஜை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவந்தநிலையில், இந்த வழக்கில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அதாவது கடந்த 8 மாதங்களுக்கு பிறகு பசப்பாவை சுட்டுக்கொலை செய்த வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணகிரி மாவட்டம் சிக்கமஞ்சு கிராமத்தை சேர்ந்த முனியப்பா, திம்மப்பா, தொட்டமஞ்சு கிராமத்தை சேர்ந்த மாதப்பா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.