தமிழகம் சினிமா

இலுமினாட்டியின் கட்டுப்பாட்டில் தமிழ் திரையுலகம்?... சர்ச்சையை ஏற்படுத்திய பகீர் தகவல்.. பதறவைக்கும் சம்பவம்.!!

Summary:

இலுமினாட்டியின் கட்டுப்பாட்டில் தமிழ் திரையுலகம்?... சர்ச்சையை ஏற்படுத்திய பகீர் தகவல்.. பதறவைக்கும் சம்பவம்.!!

பரிணாம வளர்ச்சியால் நாம் பல்வேறு கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ள நிலையில், சில கலாச்சாரங்கள் மனித குலத்திற்கு எதிரானதாக அல்லது தீங்கு விளைவிக்கும் செயலாக இருப்பதாக குறிப்பிடப்படுகின்றன. அந்த வகையில், தமிழ் மொழியில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்களில் இலுமினாட்டிகள் எனப்படுவோரின் சின்னங்கள் மறைமுகமாக வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முகநூலில் பிலால் பதியுதீன் என்பவர் இடுகையிலுள்ள பதிவில், "இன்றைய படங்களில் இலுமினாட்டிகள் சின்னங்கள் அதிகளவு வெளிப்படையாக காண்பிக்கப்படுகிறது. இவர்கள் Bhaphomet என்ற சாத்தானை வழிபடக்கூடியவர்கள் ஆவார்கள். Bhaphomet என்ற சாத்தானின் தலை ஆட்டின் தலையாகவும், உடல் இளம்பெண்ணின் உடலாகவும் இருக்கும். அந்த ஆட்டின் கொம்பை விரலில் குறிக்கும் சின்னம் Devil Horn என்று அழைக்கப்படுகிறது. 

இந்த சின்னத்தினையே நடிகர் ரஜினிகாந்த் பாபா முத்திரை என்று ஏமாற்றி கூறி வருகிறார். இலுமினாட்டிகளுடைய பழமையான மேசன் என்ற அமைப்பை தொடங்கியவர் மோசஸ். இது 3 ஆயிரம் வருடத்திற்கு முன்னதாக எகிப்தில் தொடங்கப்பட்டது. அதனாலேயே மோசஸின் படங்களில் ஆட்டின் கொம்பு இடம்பெறும். இதனை வைத்து இரண்டு விரல்களை V வடிவம் போல காண்பிக்கிறார்கள். 

Bamphomet கைவிரலை விஜயின் அரபிக்குத்து பாடலில் காண்பிக்கிறார்கள். இவரே வெறித்தனம் பாடலில் இலுமினாட்டி சின்னம் பொறித்த சட்டையுடன் நடனம் ஆடுகிறார். Beast என்ற பெயரும், 13 என்ற நம்பரும், பிரமிடுகள் வடிவிலான முக்கோணமும், கோடரிகளின் வடிவமைப்பு விதமும் இவர்கள் இலுமினாட்டிகளின் கைக்கூலிகள் என்பதை உணர்த்துகிறது.

இந்த படத்தின் பெயரில் உள்ள B என்ற எழுத்து 13 என்ற நம்பரை ஒத்தவாறு வடிவமைத்து இருக்கிறார்கள். 13 என்பது யூத இலுமினாட்டிகளின் Secret Society-ஐ குறிக்கிறது. அதனைப்போல, படமும் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் வலிமை திரைப்படத்திலும் சாத்தானின் எண் என்று கருதப்படும் 666 மற்றும் சாத்தானின் கொம்புகள், இறக்கைகள், சாத்தானின் அடிமைகள் என்று Satan's Slaves வாக்கியம் இடம்பெற்றுள்ளது.

666 என்பது Lucifer ஷைத்தானின் குறியீடு. Illuminati என்ற ஆங்கில சொல்லின் முதல் மற்றும் கடைசி எழுத்து ஐ ஆகும். இதனையே சங்கர் பட தலைப்பாக வைத்துள்ளார். இந்த படத்தில் உள்ள பாடலில் விக்ரம் உட்காரும் அரியணை இரண்டு பாம்பு ஒன்றையொன்று பின்னிக்கொண்டு, உருவம் Bhampomet சாத்தானின் வயிற்றில் இருக்கும். யூத இலுமினாட்டிகள் மனிதர்களின் தோற்றத்தில் இருந்தாலும், அரக்கர்களின் குணத்தை கொண்டு இருப்பார்கள். விக்ரம் உணர்த்தியுள்ள காப்பாத்திரத்தைத்தான் அன்றே கமல் கடவுள் பாதி, மிருகம் பாதி என்று கூறி இருப்பார். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் யூத இலுமினாட்டியின் கட்டுப்பாட்டில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார். இவரின் பதிவு வைரலாகி வருகிறது. 

 


Advertisement