தமிழகம்

300 வாழைகளை நாசப்படுத்திய காட்டு யானைகள்! குருவிக்கூட்டை கண்டதும் என்ன செய்துள்ளது பார்த்தீர்களா! ஆச்சர்யமான வீடியோ!!

Summary:

வாழைத்தோப்புக்குள் புகுந்து கிட்டத்தட்ட 300 வாழைமரங்களுக்கு மேல் நாசம் செய்த காட்டு யானைகள

வாழைத்தோப்புக்குள் புகுந்து கிட்டத்தட்ட 300 வாழைமரங்களுக்கு மேல் நாசம் செய்த காட்டு யானைகள், குருவிக் கூடுகள் இருந்த வாழை மரத்தினை மட்டும் விட்டுச்சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பல வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும்.

இந்நிலையில் பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து 5 யானைகள் வெளியேறி கீழ்பவானி வாய்க்காலை கடந்து  கிருஷ்ணசாமி என்பவருடைய வாழை தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. அவை  அங்கு வாழைகளை தின்றும், மிதித்தும் பயங்கரமாக சேதப்படுத்தின.

ஆனால் அங்கு ஒரு வாழைமரத்தில் குருவி கூடுகட்டி, குருவிக்குஞ்சுகள் இருந்த நிலையில் அந்த மரத்தை மட்டும் சேதப்படுத்தாமல் விட்டுவிட்டு மற்ற வாழைகளையெல்லாம் சேதப்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி பார்ப்போரை நெகிழவைத்துள்ளது. 


Advertisement