ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
10 மாத குழந்தை விஷம் கொடுத்து கொலை... தந்தை தற்கொலை முயற்சி.!! பதற வைக்கும் பின்னணி.!!
சிவகங்கை மாவட்டம் பாப்பக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பம்பையன் வயது(32). இவர் மனைவி சுமதி(24). இவர்கள் 6 வயது மகன், மற்றும் 10 மாத பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி மனக்கசப்பு தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று வழக்கம் போல் தம்பதிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பம்பையன் தனது 10 மாத பெண் குழந்தையை தூக்கிச் சென்று குழந்தைக்கு விஷம் கொடுத்துள்ளார். மேலும் மீதமுள்ள விஷத்தை அவரும் குடித்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ந்து போன சிலர் இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 10 மாத பெண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது. மேலும் பம்பையனுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து சிவகங்கை துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 10 மாத பெண் குழந்தை இறந்த செய்தி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... தந்தை அடித்து கொலை.!! மகன் கைது.!!
இதையும் படிங்க: திருச்சியில் பயங்கரம்... பூர்வீக சொத்து பிரிப்பதில் தகராறு.!! அண்ணனை அடித்து கொன்ற தம்பி.!!