வயிறு வலியால் துடித்த 13 வயது சிறுமி.. வயிற்றை ஸ்கேன் செய்தபோது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

வயிறு வலியால் துடித்த 13 வயது சிறுமி.. வயிற்றை ஸ்கேன் செய்தபோது மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!



Doctors removed hair and shampoo packet from stomach

கோவையை சேர்ந்த சிறுமி ஒருவரின் வயிற்றில் இருந்து அரைகிலோ தலைமுடி, ஷாம்பு பாக்கெட்டுகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். கோவையை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்படுவந்துள்ளார். வயிற்றுவலிக்கான சிகிச்சை மேற்கொண்டும் வலி சரியானபாடில்லை.

இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை வேறொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிறுமியின் வயிற்றில் ஸ்கேன் செய்தபோது உள்ளே கட்டிபோன்ற அமைப்பு இருப்பதை கண்டறிந்தனர். உடனே அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சை செய்து சிறுமியின் வயிற்றில் இருந்து அரைகிலோ தலைமுடி, ஷாம்பு பாக்கெட் போன்றவற்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சிகிச்சைக்கு பிறகு சிறுமி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.