வீட்டு வேலைகளை செய்யச்சொன்னதால் சோகம்; 14 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.!



Dharmapuri Minor Girl Suicide Parents Advice to do House Cleaning Works 

 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எரியூர், பத்திரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஏர்கோல்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரின் மகள் சசிகலா (வயது 14). 

சிறுமி சசிகலா பூஞ்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று விடுமுறை தினம் என்பதால், வீட்டில் இருந்துள்ளார். 

அப்போது, சிறுமியின் பெற்றோர் மகளிடம் வீட்டு வேலைகளை கவனிக்குமாறு கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். மாலை நேரத்தில் வேலை முடிந்ததும் தம்பதிகள் வீட்டிற்கு வந்துள்ளனர். 

வீடு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்த நிலையில், கதவை பெற்றோர் நீண்ட நேரம் தட்டியும் பலன் இல்லை. சந்தேகமடைந்து கதவை உடைத்து சென்றுபார்த்தபோது, சிறுமி சசிகலா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த ஏரியூர் காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.