உன் புருஷன் வேண்டாம்..! என்ன கல்யாணம் பண்ணிக்கோ.! ஆபாச புகைப்படத்தை வைத்து இளம் பெண்ணை மிரட்டிய கார் ஓட்டுநர்.!



Covari car driver arrested who abused married women

திருமணமான பெண்ணை தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கார் ஓட்டுநர் ஒருவர் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் உப்பிலியாப்பாளையத்தைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). உமாவின் கணவர் சென்னையில் தங்கி வேலை பார்த்துவருகிறார். உமா சொந்த ஊரில் தங்கியிருந்த நிலையில், அவரது பக்கத்துக்கு வீட்டு காரரான கார் ஓட்டுநர் ராஜா என்பவருடன் சற்று பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழத்தில், ராஜாவின் அருகில் நின்று உமா சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில், உமா மீது ஆசைப்பட்ட ராஜா, உனது கணவனை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு உமாவை வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு உமா மறுப்பு தெரிவிக்க, உனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவேன் என ராஜா உமாவை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன உமா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், ராஜாவை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.