இப்படி ஒரு சோகம் எந்த ஒரு பெற்றோருக்கும் வர கூடாது!! மகள் செய்த காரியத்தால் துடிதுடித்து உயிரிழந்த பெற்றோர்..

இப்படி ஒரு சோகம் எந்த ஒரு பெற்றோருக்கும் வர கூடாது!! மகள் செய்த காரியத்தால் துடிதுடித்து உயிரிழந்த பெற்றோர்..


couples-commit-suicide-because-of-daughter-love-marriag

மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் பெற்றோர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டசம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பொலையாம் பாளையத்தை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி ( 65), சுமதி (58) தம்பதியினர். இவர்களது ஒரே மகள் ஜனனி (22). ஜனனி கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிசியோதெரபி படித்து வருகிறார்.  ஜனனி தங்களுக்கு ஒரே மகள் என்பதால் பெற்றோர் அவரை மிகவும் பாசத்துடன் வளர்த்துவந்துள்ளனர்.

இந்நிலையில் கோவையில் தங்கி படித்துவந்த ஜனனி, தனது காதலரை திருமணம் செய்துகொண்டதாக கூறி, தனது திருமண புகைப்படத்தை தனது தந்தையின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பியுள்ளார். இதனை பார்த்து மனமுடைந்த தம்பதியினர் மகள் செய்ததை எண்ணி மிகவும் சோகத்துடனும், அக்கம் பக்கத்தினரிடம அழுது புலம்பியும் வந்துள்ளனர்.

மகள் செய்ததை எண்ணி வருந்தவேண்டாம் என அக்கம் பக்கத்தினர் ஆறுதல் கூறியும், கணவன் மனைவி இருவரும் மனமுடைந்து காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நேற்று காலை நீண்ட நேரமாகியும் பொன்னுசாமியின் வீடு பூட்டிய நிலையிலையே இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளனர்.

உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் தூங்கிய நிலையிலையே சடலமாக கிடந்துள்ளார். உடனே இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கணவன் மனைவி இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

கணவன் மனைவி இருவரும் வாழைப்பழத்தில் விஷத்தை கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.