தமிழகத்தில் மூவாயிரத்தை தாண்டியது கொரோனா..! இன்று ஒரே நாளில் 266 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

வேகமாக பரவி வரும் கொரோனா வைஸால் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிர்க்கருத்துவருவதால் கொரோனாவை கட்டுப்படுத்த மூன்றாம் கட்டமாக நாடு முழுவதும் வரும் மே 17 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழகத்தை பெறுவதை வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 266 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.