தனிமைப்படுத்தும் மையத்தில் கொரோனா நோயாளி தற்கொலை! தவித்து நிற்கும் விவசாய கூலி தொழிலாளி குடும்பம்!

தனிமைப்படுத்தும் மையத்தில் கொரோனா நோயாளி தற்கொலை! தவித்து நிற்கும் விவசாய கூலி தொழிலாளி குடும்பம்!



corona patient suicide


கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இந்த சமயத்தில் சமீப காலமாக கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்தநிலையில், தென்காசி மாவட்டம் குருவிக்குளம் அருகே உள்ள ஆவுடையாள்புரம் கிராமத்தை சேர்ந்த மாரிக்கனி என்ற விவசாய கூலி தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் தனிமைப்படுத்தும் மையத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலையில் அங்குள்ள இரும்பு கதவில் மாரிக்கனி தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்துள்ளார். 

corona

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தனிமைப்படுத்தும் மையத்தில் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், மாரிக்கனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், மாரிக்கனி என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரிக்கனிக்கு பொன்னுத்தாய் (36) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.