கண்கலங்கவைக்கும் கொரோனா மரண எண்ணிக்கை!! 24 மணி நேரத்தில் எத்தனை மரணம், எவ்வளவு பாதிப்பு தெரியுமா??



Corona last 24 hours report update in Tamil Nadu

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,651 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,651 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 21,95,402ஆக உயர்ந்துள்ளது.

corona

அதிகபட்சமாக கோவையில் மட்டும் 2,௮௧௦ பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக சென்னையில் 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 463 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 26,128 ஆக உயர்ந்துள்ளது.

சற்று ஆறுதலாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 33,646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,00,306 ஆக அதிகரித்துள்ளது.