தமிழகம்

யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.!! ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு கணினி உதவியாளர் பணி.!

Summary:

புதுக்கோட்டை மக்களே.. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.!! ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு கணினி உதவியாளர் பணி.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் சத்துணவுப் பிரிவிற்கு தலா ஒரு கணினி உதவியாளர் பணியிடம் நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தேவையான தகுதிகள்:
 
*அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எதாவது துறையில் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
*கணினியில் எம்.எஸ். ஆபீஸ் பெற்றவராக இருத்தல் வேண்டும். 
*இளநிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


இந்த பணியிடத்திற்கு மாதம் ரூ.12 ஆயிரம் மட்டும் தொகுப்பூதியம் வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணியிடம் பகுதி நேர அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவத்தை கல்லூரி மாற்று சான்று, பட்டம் பெற்றதற்கான மதிப்பெண் சான்று, தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை தேர்ச்சி பெற்றதற்கான சான்று, முன் அனுபவ சான்று, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களை இணைத்து "மாவட்ட ஆட்சியர், சத்துணவுத் திட்டப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை" என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் 16.11.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement