சென்னையில் முதன் முதலில் தோன்றிய பகுதிகள் எவை எவை தெரியுமா? இதோ.



Chennai unknown history in tamil

சென்னை உருவாகி இன்றுடன் 380 ஆண்டுகள் ஆகிறது. சென்னப்பநாயக்கரின் மகன்களான ஐயப்ப நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர் ஆகியோரிடம் இருந்து, 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி ஒருசில இடங்கள் விலைக்கு வாங்கப்பட்டு உருவானதே சென்னை.

ஆங்கிலேயர்கள் சென்னை நகரை உருவாக்கி முதன் முதலில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினார்கள். அதன் பிறகு, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் உருவாகத் தொடங்கின. அவை மதராசப்பட்டணம் என்று அழைக்கப்பட்டது. 

Madras day

அதன்பின்னர் மயிலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், திருவான்மியூர், திருவொற்றியூர் என்று சிறு, சிறு கிராமங்கள் உருவாகின. நாளடைவில் இந்த பகுதிகள் நகரங்களாக உருவெடுத்தது.

சென்னை மாகாணம் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டு தான் அதிகாரப்பூர்வமாக சென்னை என்று மாற்றப்பட்டது.