கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று புதைத்த மனைவி.. ஏரியில் நீர் குறைந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட விவகாரத்தில் பகீர்.!
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று புதைத்த மனைவி.. ஏரியில் நீர் குறைந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட விவகாரத்தில் பகீர்.!

தாயின் கள்ளகாதலால் தந்தையை இழந்த 2 வயது பிஞ்சு, தாயும் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் பெற்றோரை தேடி ஏங்கும் சோகம் நடந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம், வெள்ளைபந்தல் கிராமத்தில் இருக்கும் ஏரியில் மனித எலும்பு கூடுகள் சிதறி கிடக்கிறது என உள்ளூர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் எலும்புக்கூடுகளை மீட்டு ஆய்வுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் வெள்ளைபந்தல் கிராமத்தில் இருக்கும் பம்பு செட் வீட்டில் கைக்குழந்தையோடு தங்கியிருந்த தம்பதி மாயமானது உறுதியாகவே, காவல் துறையினர் இருவரையும் தேடி வந்துள்ளனர். தம்பதியில் 26 வயதுடைய சித்ரா என்ற பெண் சந்தேகத்தின் கீழ் விசாரணைக்குள்ளாக்கப்பட்டார்.
காவல் துறையினரிடம் கணவர் காணவில்லை என சமாளித்த பெண், விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார். 26 வயதான சித்ராவுக்கும் - மாதுளங்குப்பத்தை சேர்ந்த சந்திரனுக்கும் 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்று முடிந்து, தற்போது 2 வயது ஆண் குழந்தை உள்ளது.
இருவரும் துரைபாபு என்பவரின் வயல்வவெளியை கவனித்து பம்புசெட் வீட்டில் தங்கி இருக்கின்றனர். இதற்கிடையில், மய்யூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரோடு சித்ராவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் சந்திரனுக்கு விபரம் தெரியவந்து இருவரையும் தாக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி சந்திரனை கட்டையால் அடித்து கொலை செய்து சடலத்தை ஏரியில் குழி தோண்டி புதைத்துள்ளது. சம்பவத்தின்போது மழைக்காலமாக இருந்ததால் ஏரியில் 1 அடி ஆழத்திற்கு குழி தோண்டி உடல் புதைக்கப்பட்டுள்ளது. தற்போது நீர் வற்றி நாய்கள் உடலை இழுத்து சிதைத்துள்ளது.
மேற்கூறிய உண்மையை கண்டறிந்த திருக்கழுக்குன்றம் காவல் துறையினர், கள்ளக்காதல் ஜோடியான சித்ரா - சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.